ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஆய்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 26 December 2023

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஆய்வு.


வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர். M.S. முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் இன்று (26.12.2023)-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் (DCRB) வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்து பின்னர், அலுவலக கோப்புகளை நல்ல முறையில் பராமரித்ததற்காக பாராட்டினார். மேற்கொண்டு முக்கிய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் பட்டியல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், தவறுகள் ஏதும் நடந்திடா வகையில் ஒவ்வொரு குற்ற நிகழ்வையும் முறையாக பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.


மேலும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்றப்பிரிவு II -ல் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். மேற்கண்ட பிரிவில் அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும் பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யவும், வழக்கை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் நடத்தி குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்று தருமாறும் அறிவுறுத்தினார். இவ்அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் நல்ல முறையில் பணிசெய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். 

மேலும் மாவட்ட ஆயுதப்படையில் பதிவேடுகள், காவல் ஆளிநர்களின் தளவாட பொருட்கள் மற்றும் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு வாகனங்களையும் வருடாந்திர ஆய்வு மேற்க்கொண்டார். ஆய்வு மேற்கொண்ட அனைத்து பிரிவுகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் அவர்களது குறைகளை பற்றி கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வெ.விசுவேசுவரய்யா (தலைமையிடம்), மற்றும் குமார் (இணையவழி குற்றப்பிரிவு), துணை காவல் கண்காணிப்பாளர்கள், ராஜாசுந்தர் (மாவட்ட குற்றஆவண காப்பகம்) மற்றும் சுரேஷ் (ஆயுதப்படை) ஆகியோர் உடன் இருந்தனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad