வாலாஜாபேட்டை திமுகவின் - ஊழல் வெறியால் இறந்த குழந்தை லட்ஷன் - னுக்கு நீதி கிடைக்குமா...? பாமக கேள்வி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 31 December 2023

வாலாஜாபேட்டை திமுகவின் - ஊழல் வெறியால் இறந்த குழந்தை லட்ஷன் - னுக்கு நீதி கிடைக்குமா...? பாமக கேள்வி.


வாலாஜாபேட்டை நகராட்சி ஊழியர்களின் லஞ்ச வெறியால் பறிபோன 9 - வயது ஆண் குழந்தையின் உயிர் , கமிஷன் பெற்றுக் கொண்டு கள்ள மவுனம் காக்கும் வாலாஜா நகர மன்ற தலைவர், தகுதி நீக்கம் செய்யப்படுவாரா வாலாஜா நகர மன்ற தலைவர்..?  நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சித் தலைவர்  மௌனம் கலைப்பாரா மாவட்ட மந்திரி?

வாலாஜாபேட்டை நகராட்சியில் ஒப்பந்தம் எடுக்க ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டும் போதுமா...? கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு இது மட்டும் தான் தகுதியா...? இதில் யாரை தண்டிக்க வேண்டும்...?? 


கடந்த 28.12.2023 - ம் தேதி  காலை 11:30 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 3 - வது வார்டில் உள்ள பூண்டி மகான் கோவிலின் பின்புறம் உள்ள குளத்தில் லட்ஷன் என்ற குழந்தை தனது அக்காவுடன் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் தன்னுடைய பொருள் குளத்தில் விழுந்ததால் அதை எடுக்க முயன்ற போது தவறி விழுந்து இருக்கிறது அந்த குழந்தை, 


அந்த 9 - வயது குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் :- 

  1. வாலாஜா நகராட்சியின் ஒப்பந்ததாரரான கரடிகுப்பத்தை சேர்ந்த வெங்டேசன் நாயுடு.
  2. வாலாஜா நகர மன்ற தலைவர் T.ஹரிணி தில்லை.
  3. 3 - வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பூக்கடை.மோகன்.
  4. வாலாஜா நகராட்சி ஆணையாளர்..
  5. வாலாஜா நகராட்சியின் முன்னால் இன்ஜினியர் பரமுரசு , தற்போதையை இன்ஜினியர் சண்முகம்.
  6. வாலாஜா நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் N.தமிழ்அரசன்... 


ஏறக்குறைய 1/2 அரை மணி நேரம் கழித்து அக்குழந்தை மரணத்தை தழுவி இருக்கிறது, இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடிய உறவினர்கள், குளத்தில் குழந்தையின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர், இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் , குழந்தையை மீட்டெடுத்து வாலாஜா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார்கள்.


இதனை அடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை குளத்தில் விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து உள்ளதாக தெரிவித்தனர். இந்தக் குளத்தை மறு - சீரமைக்கவும் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பவும் வாலாஜா நகர மன்றம் சார்பாக ஒரு வருடத்துக்கு முன்பே தீர்மானம் இட்டு அதை செயல்படுத்த ஆர்டரும் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த ஒப்பந்ததாரர் முழு பணியையும் முடிக்காமல் காலதாமதம் செய்துள்ளார், இதுவரை தூர் வாரும் பணியை மேற்கொள்ளாமல் , தூர் வாரியதாக போலி கணக்கு காட்டி, அவருக்கு சேர வேண்டிய தொகையையும் பெற்றுள்ளார், ஆனால் முழு பணியையும் முடிக்கவில்லை.


மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பு அந்த குளத்தின் நான்கு திசையிலும் கருங்கற்களால் ஆன படிக்கட்டுகளைக் கொண்ட வடிவமைப்பின் படியே அந்தக் குளத்தின் படிகள்  இருந்தது , இதனை மாற்றி மறு சீரமைப்பு என்ற பெயரில் இவர்கள் ஊழல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த குளத்தின் கட்டமைப்பை மாற்றி அமைத்து முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாததை இந்த குழந்தை இறப்பிற்கு மிக முக்கிய காரணம், இதில் மிகக்முக்கியான கொடுமையான நிகழ்வு என்னவென்றால் மழைக்காலங்களில் அந்த குளம் நிரம்பிய பிறகு நிரம்பிய உபரி நீர் வெளியேறுவதற்கு மாற்று வழி இல்லாமல் மிகவும் கீழ்த்தரமான கட்டமைப்புடன் குளம் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது , இந்தக் குளத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கும் பொழுது இந்த குளத்தின் நான்கு திசைகளிலும் இருந்த கரும்கற்களால் ஆன பாறைகளை சட்ட விரோதமாகவும் முறைப்படி ஏலம் விடாமலும் பல ஆயிரம் டன் கொண்ட பாறை கற்களை சட்டவிரோதமாக திருடி சென்றுள்ளனர்.


ஆனால் கடந்த ( 28.12.2023 ) காலையே  இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது, மேலும் நகராட்சி ஒப்பந்தக்காரர் ஒப்பந்த பணி பெற்று நிறைவேற்றாமல் இருந்ததும் அதை உடனடியாக நிறைவேற்ற வாலாஜா நகர மன்ற தலைவர் தவறியதே இந்தக் குழந்தையின் இறப்பிற்கு மிக முக்கிய காரணம், வாலாஜாவில் குளத்தில் இறந்த குழந்தையும் & பெற்றோரும் சென்னை வசிக்கிறார்கள், இரண்டு குழந்தைகள் மட்டும் விடுமுறைக்கு அவர்களுடைய உறவினர் வீட்டுக்கு வந்து உள்ளனர், அதனால் அந்த குளத்தின் ஆழத்தைப் பற்றியும் அபாயத்தை பற்றியும் அந்த குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை , ஒப்பந்தக்காரர் அந்த ஒப்பந்த பணி குறித்து எந்த ஒரு பலகையையும் அந்த பகுதியில் வைக்கவில்லை.


இன்று ஒரு குழந்தையின் மரணம் என்பது ஒரு விபத்து கடந்து போகும் பொது சமூகமே , ஒவ்வொரு விபத்திற்கு பின்புலமாக மனித சமூகத்தின் அமைதியே முதல் குற்றமாக செய்கிறது, இது குறித்து நகராட்சியின் சில முக்கிய அதிகாரிகளிடம் பேசிய போது, பெற்றோர்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களுடைய பொறுப்பு என பதில் கிடைத்தது , என்பது குறிப்பிடத்தக்கது, இவர்களின் ஊழல் தனத்தை மறைப்பதற்காக பெற்றோரின் குழந்தைகள் மீது பழியை போடுவது மிகவும் கீழ்த்தரமான செயலாக உள்ளது.


இந்தக் கோவில் குளத்தை தூர்வாரி மறுசீரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 31 - லட்சம் நிதியானது மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை சட்டவிரோதமாக கலைஞர் மேம்பாட்டு நிதி என்று பெயர் மாற்றம் செய்து பயன்படுத்துவதாக ஏற்கனவே நகராட்சியிலும் வாலாஜாபேட்டையில் வாழும் மக்கள் மத்தியிலும் ஒரு மிகப்பெரிய குழப்பம் நிலவிவரும் நிலையில் இந்த குழந்தையின் இறப்பு ஆனது மிகவும் கொடுமையான நிகழ்வு.


இதில் யாரை தண்டிக்க வேண்டும்..??

  1. மேலும் அந்த குளத்தின் நான்கு திசையிலும் குளத்தின் தன்மை குறித்தோ அல்லது இதன் அபாயம் குறித்து எந்த விதமான எழுத்துப்பூர்வமான விளம்பர பலகையோ அல்லது சைகையின் மூலம் காட்டப்படும் குறியீடு உள்ளிட்ட எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஒப்பந்ததாரரை தண்டிக்க வேண்டுமா....? அல்லது இதனை கவனிக்காமல் விட்ட நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் என N.தமிழரசனை தண்டிக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்...?
  2. சென்னையில் வசிக்கும் குழந்தை கிறிஸ்மஸ் விடுமுறைக்காக உறவினரின் வீட்டிற்கு வந்ததற்கு மரணம் தான் பரிசா...? 
  3. வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் பொம்மை குளத்தில் விழுந்தது கடவுளின் விதியா அல்லது அதை கவனிக்காமல் விட்ட பெற்றோர்களின்  தலைவிதியா...?? 
  4. பா.ம.க & சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த அதிகாரிகளை தூக்கிலிட வேண்டுமா..? அல்லது அதை கண்டும் காணாமல் போன நகர மன்ற தலைவரை தூக்கிலிட வேண்டுமா...?
  5. 3 - வது நகர மன்ற உறுப்பினர் மோகன்  என்பவர் கடந்த மாதம் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் தனது 3 - வார்டில் நடைபெற்று வரும் குளம் மறுசீரமைப்பு பணிகள் ஆமை வேகத்திலும் & ஊழல் மிகுந்ததாக நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் என்று ஒரு தரப்பு கூறி வருகின்றனர், ஆனால் இதுகுறித்து முறையான எச்சரிக்கையை நகர மன்றத்தில் பதிவு செய்தாரா...? அல்லது முறைப்படி புகார் மனுவை நகர மன்ற தலைவரிடமும் அல்லது நகராட்சி ஆணையர் கொடுத்தாரா.? என்பதே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது...!
  6. ஒப்பந்த பணியை உரிய நேரத்தில் முடிக்காமல் வைத்த ஒப்பந்ததாரரை மாற்றி உடனடியாக பணியை செய்யாமல் விட்ட ஆணையாளரை தண்டிப்பதா.? அல்லது கமிஷன் பெற்றுக் கொண்டு கள்ள மவுனம் காத்த நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் N.தமிழரசனை தண்டிக்க வேண்டுமா..? என்பதை சட்டம் தான் தீர்மானிக்க வேண்டும்...!
  7. ஒப்பந்ததாரர் பணியை எவ்வாறு மேற்கொண்டு வருகிறார் என்று சோதனை செய்ய வேண்டிய நகராட்சியின் இன்ஜினியரும் மற்றும் நகராட்சியின் பணி மேற்பார்வையாளரை தண்டிப்பது யார்...? அவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டிக்க வேண்டியது யாருடைய பொறுப்பு...?
  8. நகராட்சியில் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் உரிய ஒப்பந்த தொகை பெற்ற பிறகும் பணியில் கவனக்குறைவாக இருந்ததையும் அதை கண்டும் காணாமல் சென்ற நகரம் மன்றத்தையும் யார் தண்டிப்பது? யார் இவர்களுக்கு தண்டனை பெற்று தருவது..?
  9. கோவில் குளத்தை புனரமைப்பு செய்வதாகக் கூறி அதனின் தோற்றத்தை மாற்றி இந்த விபத்திற்கு காரணமாக இருந்த நபர்களை தண்டிப்பது மனிதனா அல்லது கடவுளா அல்லது சட்டமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!?
  10. குறைந்தபட்சம் குழந்தைகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு அந்த குளத்தை சுற்றி நான்கு அல்லது ஐந்து அடி உயரத்திற்கு சுற்றுப்புற சுவர் எழுப்பி போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி இருந்தால் என்று அந்த குழந்தையின் உயிர் பரிபோய் இருக்குமா..? காரணமானவர்கள் நிச்சயம் கடவுளின் அருளால் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பது உறுதி..!


இதில் யாரை தண்டிக்க வேண்டும்..??


நகராட்சி அதிகாரிகளும் மற்றும் நகர மன்றத்தை சேர்ந்தவர்களில் லஞ்சம் & ஊழல் வெறியினால் பறிபோன இந்த குழந்தையின் உயிரை வெறும் விபத்து என்று கண்டும் காணாமலும் செல்லும் தமிழக ஊடகங்களின் நிலை கண்டிக்கக் கூடியது, அரசு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயிலிருந்து இவர்களின் லஞ்சத் தனத்தால் சில லட்சங்களை பெற்றுக் கொண்டதன் விளைவாக  முறையற்ற கட்டுமானத்தால் இந்த  குழந்தையின் உயிரை பறிபோய் உள்ளது, இந்த நிலையில் நகராட்சியில் பணியாற்றும் ஒரு சில  ஊழியர்கள் சேர்ந்து ரூபாய் 60,000 பணம் கொடுத்து இருக்கிறார்கள் , அந்த குழந்தையின் உயிரின் மதிப்பு இந்த லஞ்ச வெறியர்களின் கணக்கின்படி வெறும்  60,000 ஆயிரம் ரூபாய் மட்டுமா..?


குறைந்தபட்சம் ஒப்பந்த பணி நடந்து கொண்டிருக்கும் போது இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும் போது ஒப்பந்தக்காரர் நஷ்ட ஈடு கொடுக்க  தேவையில்லையா...? மக்களுக்காகத்தான் அரசும் அதிகாரிகளும்..? சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்வார்களா..? இறந்த குழந்தைக்கு இழப்பீடு கிடைக்குமா..? இதுகுறித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க வின் சமூக நீதிப்பேரவையின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர். இரா. செல்வமுருகன் என்பவர் , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நகராட்சி நிர்வாக துறையின் அலுவலரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகத்தில் நிகழ்வும் லஞ்சம் & ஊழல் முறைகேடு குறித்தும், கோவில் குளத்தை மறு சீர் அமைப்பு பணிகள் மேற்கொள்வதில் நடந்த ஊழல் மற்றும் அது தொடர்புடைய அலுவலர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்பட்டது.


ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக :- 

  1. இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூபாய் 1 -  கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், 
  2. குளத்தை மறுசீரமைப்பதற்காக ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் கரடிகுப்பம் வெங்கடேசன் என்பவர் மீது உரிய கிரிமினல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
  3. குளத்தை மறுசீரமைப்பதற்காக ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் எவ்வாறு பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்று முறையாக ஆய்வு செய்யாமல் இருந்த நகராட்சியின் நகராட்சியின் முன்னாள் இன்ஜினியர் பரமுரசு மற்றும் தற்போதைய இன்ஜினியர் ஆன சண்முகம் ஆகியோரை நிரந்தர பணியிடம் நீக்கம் செய்துவிட்டு அவர்கள் மீது உரிய கிரிமினல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
  4. வாலாஜா நகராட்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் ஒரு கோடி முப்பது லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட டெண்டர் விடப்பட்டு அதன் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை கவனிக்காமல் இருந்த வாலாஜா நகரம் மன்றத்தை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் நகர மன்ற தலைவர் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
  5. பலவேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை விரைவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட இளைஞர் சங்கம் சார்பாக வழங்கப்படும்,
  6. மேலும் இந்த குழந்தை இறப்பு குறித்தும் வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஊழல் குறித்தும் விரைவில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இளைஞர் சங்கம் சார்பாக துண்டறிக்கை விநியோகம் செய்யப்படும் எதிர்வரும்  ஜனவரி மாதம் 20.01.2023 - ம் தேதிக்கு மேல் நகராட்சி நிர்வாகத்தின் அவல நிலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இளைஞர் சங்கம் நடத்தும்,
  7. குழந்தையின் இறப்பு குறித்தும் வாலாஜாபேட்டை  நகராட்சியில் நடைபெறும் ஊழல் குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் Anbumani Ramadoss  அவர்களின் கவனத்திற்கும் சமூக நீதி காவலரும் , மன்னுரிமை போராளியுமான மருத்துவர் Dr. S. Ramadoss  ஐயா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,
  8. மேலும் அடுத்த மாதம் வேலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் இது குறித்து ஒரு முழுமையான ஆய்வு அறிக்கையை ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இளைஞர் சங்கம் சார்பாக கொடுப்பட உள்ளது


ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த ப.சரவணன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.. 

No comments:

Post a Comment

Post Top Ad