ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நள்ளிரவில் தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனைகளில் குடும்பம் குடும்பமாக புத்தாடைகளை அணிந்தபடி கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தை சார்ந்தவர்களும் பங்கேற்பு - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 1 January 2024

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நள்ளிரவில் தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனைகளில் குடும்பம் குடும்பமாக புத்தாடைகளை அணிந்தபடி கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தை சார்ந்தவர்களும் பங்கேற்பு


கடந்த ஆண்டின் நாட்களுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்ற ஆண்டின் நாட்கள் சிறப்பாக அமைய வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது, மனித நேயம் மற்றும் மத நல்லிணக்கம் பெருகும் வகையில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்து ஒருவருக்கொருவர் சமாதானம் சமாதானம் என தெரிவித்து கொண்டனர்


ராணிப்பேட்டை மற்றும் காரை கூட்ரோடு  பகுதியில் உள்ள சிஎஸ்ஐ தூய மரியாள் தேவாலயம் மற்றும் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் ஆகியவற்றில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது


இந்த சிறப்பு திருப்பலி பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மதங்களை சார்ந்த பொது மக்கள் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் புத்தாடைகளை அணிந்தபடி குடும்பம் குடும்பமாக தேவாலயத்திற்கு வருகை தந்திருந்தனர்

மேலும் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனையின் போது கடந்து போன ஆண்டின் நாட்களுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்ற ஆண்டின் நாட்கள் சிறப்பாக அமைய வேண்டும் என சிறப்பு திருப்பலி  பிரார்த்தனைகள் செய்யப்பட்டது, தேவாலயங்களின் பேராயர்கள் மற்றும் அருட்தந்தையார்கள் மூலம் வருகின்ற ஆண்டிற்கான நற்செய்திகளாக பைபிள் வசனங்கள் வாசிக்கப்பட்டும் கீர்த்தனை ஆராதனை பாடல்கள் பாடிய படியும் திருப்பலி பிரார்த்தனைகள் நடைபெற்றது.


இதனை தொடர்ந்து மனித நேயம் மற்றும் மத நல்லிணக்கம் பெருகும் வகையில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்து ஒருவருக்கொருவர் சமாதானம் சமாதானம் என தெரிவித்து கொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad