முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் விதமாக இராணிப்பேட்டை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் ஆற்காடு தொகுதி முழுவதும் 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தனர்.
இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன், திமுகவின் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் வேதா சீனிவாஸ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MC, நகர மன்ற தலைவர் தேவி பெண்ஸ் பாண்டியன், நகர மன்ற துணை தலைவர் Dr. பவளக்கொடி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்கள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் அணி நகர அமைப்பாளர் தேவராஜ் மற்றும் நகர துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..

No comments:
Post a Comment