ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பக்துவெட்டி கூட்ரோடு பகுதியில் ஆற்தாடு தாலுகா காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா மற்றும் போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த நபரை மடக்கிபிடித்து விசாரணை மேற்செய்ததில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆற்காடு பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்ததாக தெரிந்தது இதனைத் தொடர்ந்து தீவிரமாக விசாரணையில் இறங்கிய போலீசார் கடந்த நான்கு மாதத் திற்கு முன்பு ஆற்காடு அடுத்த புது மாங்காடு பகுதியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஜெகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 46 சவரன் தங்க நகைகள் மற்றும் குடிமல்லூர் பகுதியில் திருடியடிவி ஆகியவை கொள்ளையடித்ததை தானாகவே ஒப்புக்கொண்டார்
இதனையடுத்து அவன் மீதுவழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து திருடிய தமிழ்செல்வன் என்பவனை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவின்படி நகையை கொள்ளையடித்து அதை அடமானம் வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் மத்திய சிறையில் அடைப்பதற்கான உத்தரவினை ஆட்சியர் வளர்மதி வழங்கினார்
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment