இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 32 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்), துணை காவல் கண்காணிப்பாளர்கள், பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்) மற்றும் இராஜாசுந்தர் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்) ஆகியோர் உடன் இருந்தனர்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment