இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப.,இன்று (16.11.2023) முத்துக்கடை, S.K மஹாலில் நடைபெற்ற 70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 5047 பயனாளிகளுக்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கினார்கள்.
உடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரா.சிவக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் (பொறுப்பு) தலைவர்நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் திருமதி.தேவிப்பிரியா, துணைப் பதிவாளர் சி.சிவமணி மற்றும் பலர் உள்ளனர்.
-சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment