வீட்டு மனை பட்டா வழங்க கோரி தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 1 July 2024

வீட்டு மனை பட்டா வழங்க கோரி தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கினர், அப்பொழுது மண்டல தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான கலை நண்மணி பெ. கலைச்செல்வன்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும்,  தற்போது நாடக கலைஞர்கள் நாடகம் இல்லாத காரணத்தினால் வருமானம்  இல்லாமல் நெளிந்து, குன்றி போய் இருக்கிறார்கள், நம் பாரம்பரிய கலையை தற்காத்து வரும்  நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது, அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நிதி உதவி வழங்கி உதவி செய்ய வேண்டும், பெரும்பாலான நாடக கலைஞர்கள் அரசு அவர்களுக்கு வழங்கும் சலுகைகளை கூட அறியாமல் இருக்கிறார்கள் இது போன்ற நாடக கலைஞர்களை கண்டுபிடித்து அரசு அதிகாரிகள் முன் வந்து உதவ வேண்டும், 50 ஆண்டு காலமாக நாடக கலைஞர்களாக இருந்து வரும் நபர்களுக்கு கலை பண்பாடு அடையாள அட்டை வழங்கப்படவில்லை, அவர்களுக்கு நிதி உதவி கிடைக்கவில்லை, ஆடை ஆபரணங்களுக்கான நிதி உதவி கிடைக்கவில்லை.


எனவே இது போன்ற நபர்களுக்கு உதவுவதற்கு ஒன்றியத்திற்கு ஒருவர் விஷயம் தெரிந்த நாடக கலைஞரை நியமனம் செய்து அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் வட்டத்திற்கு ஒரு கலை கலைக்கூடம் கட்டித் தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad