ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர். புவியரசு தலைமையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ராணிப்பேட்டை கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் நல திட்ட அலுவலர். பார்த்திபன் அவர்கள் கலந்துகொண்டு குழந்தைகள் பாதுகாப்பு நலன் குறித்து விவாதித்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர். மெய்ஞானம், ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி ரவி, ஊராட்சி செயலாளர். சௌமியா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை. தேவிகா, கிராம சுகாதார செவிலியர். ஆனந்தி, அங்கன்வாடி பணியாளர். உமா, சுய உதவிக் குழு உறுப்பினர். சரஸ்வதி, கிராம பஞ்சாயத்து உறுப்பினர். விஜயா, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment