ராணிப்பேட்டையில் வருவாய்த் துறை கூட்டமைப்பு சார்பில் சார்பில் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 February 2026

ராணிப்பேட்டையில் வருவாய்த் துறை கூட்டமைப்பு சார்பில் சார்பில் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.


ராணிப்பேட்டை, பிப். 10:


வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.


போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகளில், வருவாய்த் துறைக்கென தனி சிறப்பு பணிச் சட்டம் உருவாக்க வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய ஊதியம் முறையாக வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பவை இடம்பெற்றன.


மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத தொகையை ரத்து செய்ய வேண்டும், தற்காலிக நியமனங்களை கைவிட்டு காலிப் பணியிடங்களை நிரந்தர பணியாளர்களால் நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


அதேபோல், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும், அவர்களுக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தினர். உயர் அலுவலர்களின் அதிகமான பணி நெருக்கடிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


போராட்டத்தின் ஒரு பகுதியாக சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊழியர்களை, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

No comments:

Post a Comment

Post Top Ad