ராணிப்பேட்டையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 April 2023

ராணிப்பேட்டையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் சாலை பணியாளர்களை பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்  மாவட்ட தலைவர்.ஜே. வெங்கடேசன், மாவட்ட பொருளாளர். ஏ. தணிகாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

41 பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும், இறந்த சாலை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும், தர ஊதியம் 1900 ஆக உயர்த்தி அன்ஸ்கீல்டு பணியாளர்களாக அறிவித்திட வேண்டும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை கட்டாயமாக்கி சிறு பெரு வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் நிறுவன பெயர் ஊர் பெயர் தமிழில் பெரிதாக எழுதிட வேண்டும் என 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


இதில்  மாவட்ட துணை தலைவர்கள்.கே. துரை, கே. ஐயப்பன், எம். நமச்சிவாயன், கே.லோகநாதன், ஜி. ராமமூர்த்தி, இணைச் செயலாளர்கள் ஜே. நந்தகுமார், எம். மாறன், பி. ரவி, என். ரேணு, எம். இளங்கோ ஆகியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad