இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சார்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரச்சார பேரணி வேட்டாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ரவி மற்றும் தலைமை ஆசிரியர் ஏ. வசந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சத்துணவு அமைப்பாளர் கா. தமிழரசி, தற்காலிக ஆசிரியர் தேவிகா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் மாணவ மாணவிகள் பதாதைகளை ஏந்தி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment