இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சார்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியை. ஏ.வசந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர். நிரோஷா அவர்கள் தலைமையில் இரண்டாவது நாளாக நடைபெற்றது.

இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர்.நதியா மற்றும் மாணவர்கள் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும்படி தெறிவித்து அரசு பள்ளியில் இடம் பெற்றுள்ள சலுகைகள் பற்றி பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment