கலவை அத்தியானத்தில் வீட்டு சிலிண்டர் வெடித்து பெண் தீவிபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி பலி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 April 2023

கலவை அத்தியானத்தில் வீட்டு சிலிண்டர் வெடித்து பெண் தீவிபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி பலி.


இராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா, திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தைச் சேர்ந்த  நாராயணன் மனைவி விஷ்ணு பாலா (வயது 32) பள்ளியில்சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15-ம் தேதி காலை விஷ்ணு பாலா, சமையல் அறைக்கு சென்று மின் விளக்கை ஆன் செய்த போது காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

கண்ணிமைக்கும் நேரத்தில் விஷ்ணு பாலாவின் ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு நாயாராயணன் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். பின்னர் தீ காயங்களுடன் துடித்த விஷ்ணு பாலாவை ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 



பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த சத்துணவு அமைப்பாளர் விஷ்ணு பாலா, சிகிச்சை பலனின்றி 19-04-2023 புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கலவை காவல் நிலையத்தில் கணவர் நாராயணன் புகாரின் அளித்ததின் பேரில் . மனுவைப் பெற்றுக் கொண்ட கலவை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணமூர்த்தி, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- வாலஜா தாலுகா செய்தியாளர் நிஹால் அஹமத். 

No comments:

Post a Comment

Post Top Ad