நெமிலி அருகே இடிதாக்கி விவசாயி பலி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 April 2023

நெமிலி அருகே இடிதாக்கி விவசாயி பலி.


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் கிராமம் பெரிய தெருவில் வசித்து வருபவர் முனுசாமி இவரது மகன் ராஜேந்திரன்(43). இவர் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தனது நிலத்தில் விவசாய பணிகளை செய்துகொண்டிருந்தப்போது எதிர்பாராதவிதமாக இடிதாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.


நிலையத்திற் சம்பவத்தை கண்டவர்கள் நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.  


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad