ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மேற்கு ஒன்றியம் சார்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாநில சுற்றுச்சூழலின் துணைச் செயலாளர் வினோத் காந்தி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் உடன் பிறப்புகளாய் இணைவோம் என்ற முகாம் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் மற்றும் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஆ.சௌந்தர் தலைமையில் அரக்கோணம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்பாக்கம் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி அருகில் நடைபெற்றது.

இதில் பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஒன்றிய அவை தலைவர். சக்கரவர்த்தி, ஒன்றிய துணை செயலாளர்கள் பாபு, பூசணம், கன்னியப்பன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், இளைஞரணி நிர்வாகிகள் நந்தி புருஷோத்தமன், தகவல் தொழில்நுட்ப அணி ராகுல் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment