ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடி, மின்னல், சூரை காற்றுடன் பலத்த மழை பெய்தது அதனால் நெமிலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

அதை தொடர்ந்து இன்று மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை இடி மற்றும் சூரை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நெமிலி பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்பட்டு அதை கடந்து செல்கின்றனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment