மழைக்காலங்களில் நெமிலி சந்தையின் அவல நிலை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 25 April 2023

மழைக்காலங்களில் நெமிலி சந்தையின் அவல நிலை!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி சந்தை மேட்டு பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில்  வாரச்சந்தை நடப்பது வழக்கம் .வழக்கம் போல் திங்கட்கிழமை இன்று சந்தை நடைபெறும்போது மாலையில் பெய்த கனமழையால் சந்தைமேட்டு பகுதி குளம்போல் காட்சி அளித்தது. 


நெமிலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சந்தைக்கு பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். அதன் ஒரு பகுதியாக சந்தைமேட்டு தெரு தண்ணீர் தேங்கி சுகாதாரம் இல்லாமல் உள்ளது அந்த தெரு மக்கள் மற்றும் சந்தைக்கு வரும் மக்கள் அதை எதிர்கொள்கின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் தீர்வு காணுமா?


செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad