இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி மன்றக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கடும் மழையின் காரணமாக டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியை உருவாக்க வேண்டும்.மழை நீரை வீணாக்காமல் சேமிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சித் துணைத் தலைவர் சந்திரசேகர்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment