நெமிலி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ரதி அவர்கள் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 27 April 2023

நெமிலி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ரதி அவர்கள் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் பெய்த கனமழையால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் வரக்கூடும் அவற்றை வரும் முன்னரே தடுக்க புன்னை ஆரம்ப சுகாதார நிலையவட்டார மருத்துவ அலுவலர் .டாக்டர்.ரதி வட்டார சுகாதார மேற்பார்வையாளர். மோகன்ராஜ் சுகாதார ஆய்வாளர் .பெருமாள், பூஞ்செழியன், வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நெமிலி தாலுகாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக வேட்டாங்குளம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சங்கர், சிவபாதம், நந்தகுமார், அப்பு, அனிதா, சபீனா, ரேவதி ஆகியோர் ஒவ்வொரு வீடாக சென்று பாத்ரூம் மற்றும் மக்கள் பயன்படுத்தாமல் உள்ள மழைநீர் தேங்கியுள்ள பொருட்கள் என கண்டறிந்து அந்த இடத்தில் ப்ளீச்சிங் பவுடர் தெளித்து டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.  


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad