ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சார்பில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து பிரச்சார வேன் மூலம் விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் .ஏ .வசந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சத்துணவு அமைப்பாளர். கா. தமிழரசி தற்காலிக ஆசிரியர் .தேவிகா பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் .கல்பனா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இந்த பிரச்சார வேன் வாகனத்தின் மூலம் வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் துண்டு பிரசுரங்கள் வழங்கி பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி அரசின் திட்டம் எடுத்துரைத்து பள்ளியின் சார்பில் தங்கள் வேன் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment