நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு முயற்சியால் பழங்குடி (ST) இனத்தை சேர்ந்த 14 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 April 2023

நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு முயற்சியால் பழங்குடி (ST) இனத்தை சேர்ந்த 14 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவுக்கு உட்பட்ட கணபதிபுரம் பகுதியில் உள்ள ஓடை நீர்நிலை புறம்போக்கு பகுதியில் 14 குடும்பத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் தற்காலிக குடியிருப்பு அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எந்தவித சமரசமின்றி உடனடியாக அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. 

இதனையடுத்து வருவாய் துறையினர் இருளர் இன மக்களுக்கு சித்தூர் கிராமத்தில் இடத்தை தேர்வு செய்தனர். இவர்களுக்கு நேற்று அமைச்சர் காந்தி இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை வழங்கினார். மேலும் 9 நபர்களுக்கு பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டி தர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்போது நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, துணை தாசில்தார் முத்துகுமரன், வருவாய் ஆய்வாளர் பிள்ளையார், வி.ஏ.ஓ.உமா, ஒன்றியக் குழு உறுப்பினர் சரஸ்வதி பார்த்திபன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad