ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, பனப்பாக்கம் உள்வட்டம், உளியநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர். அ. குல்நார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். ஆதிமூலம் தலைமையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து வேன் மூலம் உளியநல்லூர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் சென்று பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி அரசு பள்ளிகளில் அரசின் சலுகைகளை எடுத்து கூறி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் சத்துணவு அமைப்பாளர். கலைச்செல்வி, உதவி ஆசிரியர்.அம்சவேணி, மலர்விழி, நிர்மலா,தமிழ்ச்செல்வி, புன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர் சிவபாதம் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment