ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 477 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1 கோடி 44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 29 April 2023

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 477 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1 கோடி 44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்!


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ் நாடு அரசு மாற்றுத்திறனாளி நலத்துறை  477 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1கோடி 44 இலட்சம் மதிப்பிலான  அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் 99 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 81 நபர்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 16 நபர்களுக்கு பேட்டரியால் இயங்ககூடிய சிறப்பு சக்கர நாற்காலிகள், 22 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், 60 நபர்களுக்கு சக்கர நாற்காலிகள், 82 நபர்களுக்கு கைத்திறன் பேசிகள், 85 நபர்களுக்கு காதுக்கு பின் பக்கம் பொருத்தும் காதொலி கருவிகள், 10நபர்களுக்கு நவீன செயற்கை கால்கள் மற்றும் 22 நபர்களுக்கு வங்கி கடன் மானியத் தொகை ஆகியன கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.ஆர். காந்தி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களும் நல திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

இதில் மாவட்ட ஆட்சியர். ச.வளர்மதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கிரண் ஸ்ருதி, திமுகவின் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர். வினோத் காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஜே.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத் தலைவர். ஏ.கே. சுந்தரமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் சிவானந்தம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர். ஜெயந்தி திருமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகரச் செயலாளர் பூங்காவனம், இராணிப்பேட்டை நகர மன்ற தலைவர்.சுஜாதா வினோத், காவேரிப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர். அனிதா குப்புசாமி, திமிரி ஒன்றிய குழு தலைவர் .அசோக், அரக்கோணம் ஒன்றை குல தலைவர். நிர்மலா சௌந்தர், நெமிலி ஒன்றிய  பெருந்தலைவர். பெ. வடிவேலு, ஆற்காடு நகர மன்ற தலைவர். தேவி பென்ஸ் பாண்டியன், வாலாஜாபேட்டை நகர மன்ற தலைவர.ஹரிணி தில்லை, மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் முகமது அமீன், சோளிங்க நகர மன்ற தலைவர். தமிழ்ச்செல்வி அசோகன், அம்மூர் பேரூராட்சி தலைவர் திருமதி .சங்கீதா மகேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்.கே.பி. வெங்கடேசன், வாலாஜா ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், இராணிப்பேட்டை. ஆர். டி. ஒ.வினோத்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad