இந்த நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து நெமிலி ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 31,00,000 (முப்பத்தொரு லட்சம்) மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.


இதில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி, திட்ட இயக்குனர். லோகநாயகி, நெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவர் பெ. வடிவேலு, ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் தலைவர். தீனதயாளன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர். மணிமேகலை வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர். ஆனந்தி செல்வன், நெமிலி பேரூர் கழக செயலாளர். ஜனார்த்தனன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். சிவகாமி நாதன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி. எஸ். முரளி, சோளிங்கர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். ராம்கி, நெமிலி பீ. டி. ஓ- க்கள். சிவராமன், பாஸ்கரன், நெமிலி வட்டாட்சியர். பாலச்சந்தர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார். ஆனந்தன், வருவாய் ஆய்வாளர். கனிமொழி, வி.ஏ.ஓ. மணிகண்டன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment