திமுக சார்பில் நெமிலி, வேட்டாங்குளம், புதூர் ஆகிய கிராமங்களில் திராவிட மாடல் ஆட்சியின் தெருமுனை பிரச்சாரம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 27 May 2023

திமுக சார்பில் நெமிலி, வேட்டாங்குளம், புதூர் ஆகிய கிராமங்களில் திராவிட மாடல் ஆட்சியின் தெருமுனை பிரச்சாரம்!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், நெமிலி, வேட்டாங்குளம், புதூர் ஆகிய கிராமங்களில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நெமிலி மேற்கு ஒன்றிய திமுக கழகத்தின் சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர். பி. ரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி. எஸ். முரளி அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே. எல். ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஏ. கே. சுந்தரமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர். முரசொலி மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு திறந்த வேனில் அமர்ந்தவாறு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். 


இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். கவிதா சிவகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். சங்கர், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர். அண்ணாமலை, அகவலம் கவுன்சிலர். கிருஷ்ணவேணி வெங்கடேசன், மக்கள் நலப் பணியாளர். ஏகாம்பரம், வேட்டாங்குளம் இளைஞர் அணி. பிரசாத், திமுக கழக உறுப்பினர். ஆர். காளிதாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad