ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், நாகவேடு மற்றும் காட்டுப்பாக்கம் கிராமங்களில் தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழகத்தின் சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ் .ஜி.சி.பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஏ .கே.சுந்தரமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் ஆம்பூர்.தர்மன் அவர்கள் கலந்து கொண்டு திறந்த வேனில் அமர்ந்தவாறு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். இதில் நெமிலி மத்திய ஒன்று அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றி துணைச் செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதிகள். சம்பத், தணிகைவேல் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment