நெமிலி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி ( வருவாய் தீர்வாய) முகாம் - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 25 May 2023

நெமிலி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி ( வருவாய் தீர்வாய) முகாம்


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய முகாம் நடைபெற்றது. இந்த முகாம் சப் கலெக்டர் பாத்திமா தலைமையில் நடைபெற்றது. நெமிலி தாசில்தார் பாலசந்தர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.


இந்த முகாமில் வீட்டுமனை, முதியோர் உதவிதொகை, ரேசன் கார்டு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்டவைகள் வழங்கக்கோரி 40க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.இந்த முகாமில் துணை தாசில்தார்கள் பன்னீர்செல்வம், பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் கனிமொழி,தனலட்சுமி,வேல்விழி, கிராம நிர்வாக அலுவலர்கள். மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad