

இது தொடர்பாக தென்மாம்பாக்கம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் ஏலம் எடுத்தவர்கள் திடீரென மரங்களை வெட்டியதால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த நெமிலி தாசில்தார். பாலச்சந்தர் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
வெட்டப்பட்ட மூன்று வேப்ப மரங்களை தென் மாம்பாக்கம் கிராமத்திற்கு வழங்கிடவும், மேலும் 30 மரக்கன்றுகளை அந்த இடத்தில் நடவு செய்து தருவதாகவும் தாசில்தார் அவர்களின் பேச்சுவார்த்தை தொடர்ந்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment