ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேலேரி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால் அதற்கான புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் காலை இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது அப்போது திடீரென மூலவர் சன்னதி கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது.
இதில் கோபுரத்தின் பக்கவாட்டில் இருந்த காமாட்சி அம்மன் சிலை கீழே விழுந்து சேதமடைந்தது மேலும் கோபுரத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. கும்பாபிஷேகம் நடக்க உள்ள கோயில் கோபுரம் மீது மின்னல் தாக்கி அம்மன் சிலை கீழே விழுந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோபுரத்தில் இருந்து அம்மன் சிலை கீழே விழுந்ததால் தெய்வ குற்றம் ஆகிவிடும் என பொதுமக்கள் பீதியடைந்ததால் பரிகார பலனாக சிவாச்சாரியார்கள் யாக சாந்தி பூஜை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கோயிலை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.



No comments:
Post a Comment