ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த அரக்கோணம் கோட்டம் நெமிலி அடுத்த புன்னையில் ரூ.1, 45,0000 (ஒரு கோடியே நாற்பத்தி ஐந்து லட்சம்) மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 110/ 33 KV SS திறன் கொண்ட புதிய மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். முனிரத்தினம், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ். ஜி. சி.பெருமாள், பேரூராட்சி தலைவர் ரேணுகா தேவி சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.
இதில் நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள் சீனிவாசன், சரளா முரளி, அவைத்தலைவர் நரசிம்மன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்தமன், பேரூராட்சி அவைத்தலைவர். சேகர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துளசிராமன், ராமலிங்கம் மற்றும் மின்சார ஊழியர்கள், திமுக கழக நிர்வாகிகள், காங்கிரஸ் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

No comments:
Post a Comment