சு. ரவி எம்.எல்.ஏ தலைமையில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 29 May 2023

சு. ரவி எம்.எல்.ஏ தலைமையில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழகத்தில் சென்ற வாரம் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருந்தது மேலும் இது தொடர்பாக அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டு பின்பு கவர்னரை சந்தித்தும் புகார் மனு கொடுத்தார். 


இது தொடர்ந்து ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. ரவி அவர்கள் தலைமையில் அதிமுக- வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பொருளாளர். நவநீதகிருஷ்ணன், நெமிலி மேற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர். முருகன், நகர வர்த்தக அணி. தினேஷ், தகவல் தொழில்நுட்ப அணி. சுரேந்தர், மாணவர் அணி தலைவர். வினோத், மாணவர் அணி செயலாளர். செல்வம், வெங்கட், முத்துக்குமார், ரவி, கணேசன், சுகுமார், கவுன்சிலர். சங்கர் மற்றும் மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad