

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர். பிரபு கஜேந்திரன் மற்றும் திமுக தலைமை கழக பேச்சாளர் தூத்துக்குடி. சரத்பாலா ஆகியோர் கலந்துகொண்டு தமிழக அரசின் சாதனைகளான மகளிர் மேம்பாடு, செப்டம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000, புதுமைப்பெண் திட்டம், ரூ. 350 கோடியில் 2.09 லட்சம் மாணவியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை, காலை உணவு திட்டம், ரூபாய் 500 கோடியில் 18 லட்சம் தொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கு பயன், கட்டணம் இல்லா பேருந்து, ரூ. 4,426 கோடியில் 276 கோடி முறை மகளிரும், ரூ. 254 கோடியில் 15.87 லட்சம் முறை திருநங்கைகளும் பயணித்து சராசரியாக மாதம் ரூ. 888 சேமிப்பு, விவசாயிகள் நலன், 31.53 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 23,127 கோடி பயிர்க்கடன், 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 5.36 லட்சம் ஏக்கரில் குருவை நெல் சாகுபடி, விளையாட்டு மேம்பாடு: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், தமிழர் வரலாறு, ரூ. 18 கோடியில் கீழடி அருங்காட்சியகம் என தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.
இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி. எஸ். முரளி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். முகமது அப்துல் ரகுமான், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment