நெமிலி தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா.234 பயனாளிகளுக்கு ₹1.3 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள். பெ. வடிவேலு, எஸ் .ஜி .சி. பெருமாள் அவர்கள்பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 1 June 2023

நெமிலி தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா.234 பயனாளிகளுக்கு ₹1.3 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள். பெ. வடிவேலு, எஸ் .ஜி .சி. பெருமாள் அவர்கள்பங்கேற்பு!


இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 234  பயனாளிகளுக்கு ₹1.3கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சப் கலெக்டர் பாத்திமா அவர்கள் வழங்கினார், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா அலுவலகத்தில் நிறைவு நாளில் ஜமாபந்தி நடைபெற்றது 6 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மொத்தம் 409மனுக்களில் 80 உடனடி தீர்வு காணப்பட்டு மீதமுள்ள மனுக்கள் பரிசீ நிலை உள்ளது.


தொடர்ந்து 234 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டம், வேளாண் துறை இடுப்பொருட்கள், தோட்டக்கலை மலை பயிர்கள், புன்னை ஆரம்ப சுகாதார நிலையம் ஊட்டச்சத்து பெட்டகம், திட்ட அலுவலர் மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் போட்டோ மற்றும் சிறுபான்மையினர்  ஆகிய துறைகளைச் சார்ந்த 234 பயனாளிகளுக்கு ₹10338008. மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை  அரக்கோணம் ஆர்டிஓ பாத்திமா அவர்கள் வழங்கினார். 


அப்போது உடன் தாசில்தார். பாலச்சந்தர், சமூகப் பாதுகாப்பு தாசில்தார் ஆனந்தன், ஒன்றிய குழு தலைவர். வடிவேலு ,நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் .எஸ். ஜி .சி. பெருமாள், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன், துணை தாசில்தார்கள். பன்னீர்செல்வம், பாஸ்கரன், வட்ட வழங்கல் அதிகாரி மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் கிராம அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad