நெமிலி பேருந்து நிலையத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா; திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வினோத் காந்தி பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 3 June 2023

நெமிலி பேருந்து நிலையத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா; திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வினோத் காந்தி பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேருந்து நிலையத்தில் நெமிலி திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக கழக செயலாளரும், பெ. வடிவேலு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி கலந்துகொண்டு கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதில் திமுகவின் பேரூர் செயலாளர். ஜனார்த்தனன், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் நசீர், ஒன்றிய நிர்வாகிகள் புருஷோத்தமன், அப்துல் ரகுமான், சங்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி


தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad