அமைச்சருடன் பெ. வடிவேலு சந்திப்பு புதிய பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு விழாவிற்கு அழைப்பு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 30 June 2023

அமைச்சருடன் பெ. வடிவேலு சந்திப்பு புதிய பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு விழாவிற்கு அழைப்பு.


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெல்வாய் ஊராட்சியின் மதுரை நெல்வாய் கண்டிகை கிராமத்தில், 240 குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில் இவர்கள் தங்களது ரேஷன் பொருட்களை, பெறுவதற்கு 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு கூட்ட நெரிசலில், ஒருநாள் முழுவதும் நேரம் விரையமாகிறது, இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், ரேஷன் பொருட்களை 3 கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து வரவேண்டிய சூழ்நிலை உள்ளதுஎனவே தங்களது கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக்கடை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வந்தனர். 


இது குறித்து, நெல்வாய் கண்டிகை கிராம பொதுமக்கள், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு  அவர்களையும், துணைப் பெருந்தலைவர் ச.தீனதயாளன் அவர்களையும் சந்தித்து, தங்கள் கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக் கடை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களிடம் உங்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். இது குறித்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி ஆகியோரிடம் உங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறி விரைவில் பகுதி நேர நியாய விலைக் கடை அமைப்பதற்கான அனுமதி ஆணையை பெற்றுத் தருவதாக அவர்களிடம் உறுதியளித்தார். 


அதை தொடர்ந்து மேற்படி கோரிக்கை குறித்து மாண்புமிகு அமைச்சர்  அவர்களிடம் சொன்னதும், உடனே மாவட்ட ஆட்சியரை  தொடர்பு கொண்டு, நெல்வாய் கண்டிகை கிராமத்தில் உடனடியாக பகுதிநேர நியாய விலைக்கடை அமைக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார். அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி அவர்கள் நேற்று அதற்கான உத்தரவு வழங்கினார். அந்த உத்தரவு கடிதத்தினை, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களிடம், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு அவர்கள் பெற்றுக்கொண்டு, நெல்வாய் கண்டிகை கிராம மக்களின் சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அதை தொடர்ந்து நெல்வாய் கண்டிகை கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக் கடையை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் திறந்து வைக்க உள்ளார். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad