ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த திருமால்பூர் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டு சாதனைகள் மற்றும் புதிய இந்தியா பாரத பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மக்கள் தொடர்பு பேரியக்கம் சார்பில் பாரத ஜனதா கட்சியின் மாவட்ட பட்டியல் இன தலைவர். கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.


- முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பான முதலாக தடைச் சட்டம்,
- படித்த பட்டதாரி சிறுபான்மையர் பெண்களுக்கு திருமண நிதி உதவி ரூபாய். 50,000,
- கொரோனா காலகட்டத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கியது,
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு முழு ஒத்துழைப்பு அளித்து மோடி ஜியின் அரசாங்கம்,
- அனைவருக்கும் வீடு திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்தனர்.
இதில் நெமிலி மேற்கு ஒன்றிய தலைவர். சக்திவேல், மாநில செயலாளர். ஆனந்தன், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர். வெங்கடேசன், ஒன்றிய பொதுச் செயலாளர். பாஸ்கரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment