சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் பழைய கண்டிகை கிராமத்தில் 15 வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் மாவட்ட கவுன்சில் நிதியிலிருந்து ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும் அமைச்சர் திறந்து வைத்தார்.


இதனை தொடர்ந்து நெல்வாய் கண்டிகை கிராமத்தில் நடமாடும் ரேஷன் கடையை அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்பாள் பெருமாள், தனியார் நிறுவன உரிமையாளர். கடிகாச்சலம், ஒன்றிய செயலாளர். எஸ்.ஜி.சி.பெருமாள், ரவீந்திரன், துணை சேர்மன். தீனதயாளன், பீ. டி. ஒ- க்கள் சிவராமன், பாஸ்கர், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment