ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக மற்றும் நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி சார்பில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி ஆகியோரின் வழியில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் எஸ். ஜி.சி.பெருமாள் அவர்கள் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.


இதில் நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சென்ற ஆண்டு மகேந்திரவாடி மற்றும் புன்னை ஏரிக்கரையில் நிலத்தடி நீர் சேமிக்க பனை விதைகள் நடப்பட்டன அதை நினைவு கூர்ந்து வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், தூய்மையான காற்றை சுவாசிப்போம் சுற்றுச்சூழலை காப்போம் என உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment