ராணிப்பேட்டை மாவட்டம் மணிப்பூரில் நடந்த மனித அத்துமீறல்களையும் பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் துன்புறுதல்களையும் கண்டித்து தமிழக முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் ராணிப்பேட்டை பேருந்து நிலையம் முத்துக்கடையில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான. ஜெயந்தி குருமூர்த்தி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான சுந்தராம்பாள் பெருமாள் அவர்களின் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழகத்தை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் அணியை சார்ந்த பெண்கள் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment