மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காது, மூக்கு, தொண்டை, பல், கர்ப்பபை புற்றுநோய் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் அளிக்கப்பட்டது. இந்த
முகாமில் 600க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு தாய், சேய் நல பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் மகளிர் குழு சார்பில் பல்வேறு ஸ்டால்கள் அமைத்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் தீனதயாளன், எஸ். ஜி. சி. பெருமாள், நரசிம்மன், சம்பத், வட்டார மருத்துவ அலுவலர் ரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர். கந்தசாமி, மருத்துவர்கள் வெற்றிச்செல்வன், கனிமொழி, சுகாதார ஆய்வாளர்கள். பூஞ்செழியன், பெருமாள், தேவநாதன், செவிலியர் சர்மிளா மற்றும் பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment