ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலெக்டர். ச. வளர்மதி அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்பொழுது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் கற்பித்தல் திறனையும் கேட்டறிந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்தார் மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
இதை அடுத்து நாகவேடு அரசு பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகளுக்குள் சென்று பார்த்தார். அப்பொழுது அங்கு கழிவறை அசுத்தமாக இருப்பதை கண்டு முகம் சுழித்த கலெக்டர் கழிவறையை இப்படியா வைத்துக் கொள்வது என அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார். இதை தொடர்ந்து கழிவறையை உடனடியாக சுத்தம் செய்து எனக்கு அறிக்கை தருமாறு உத்தரவிட்டார். மேலும் அதே பகுதியில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்த கலெக்டர் திட்ட பணிகளில் மந்தகதி கூடாது விரைந்து முடிக்க பீ. டி.ஓ -க்கள் மற்றும் இன்ஜினியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது நெமிலி பீ. டி.ஓ -க்கள் சிவராமன், பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment