திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க- வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 July 2023

திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க- வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை பேருந்து நிலையம் முத்துக்கடையில் ராணிப்பேட்டை மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் இவைகளை எல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் முதல்வர். மு.க. ஸ்டாலின் அவர்களை கண்டித்தும் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுகவை சார்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். சம்பத், அதிமுக மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், நெமிலி அதிமுக மேற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர். முருகன், அதிமுக நகர வர்த்தக அணி. தினேஷ், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சுரேந்தர், மாணவர் அணி தலைவர். வினோத், மாணவர் அணி செயலாளர். செல்வம், வெங்கட், முத்துக்குமார், ரவி, கணேஷ், சுகுமார், கவுன்சிலர். சங்கர், மற்றும் அதிமுக நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad