நெமிலியில் லோன் மேளா, படித்த இளைஞர்கள் பங்கேற்க நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் . பெ.வடிவேலு அழைப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 July 2023

நெமிலியில் லோன் மேளா, படித்த இளைஞர்கள் பங்கேற்க நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் . பெ.வடிவேலு அழைப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் நாளை 27 ஆம் தேதி மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் லோன் மேளா நடைபெற இருக்கிறது. எனவே படித்த இளைஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையும் படி அழைப்பு விடுத்துள்ளார். 

மேலும் அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது நாளை 27/7/2023 அன்று படித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கும் லோன் மேளா முகம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த அரிய வாய்ப்பினை படித்த இளைஞர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு தனது அறிக்கையின் மூலம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad