ராணிப்பேட்டை மாவட்டம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் ராணிப்பேட்டை, வி. சி. மோட்டூர், வாலாஜாபேட்டை, அம்மூர், நீலகண்டராயன் பேட்டை, சோளிங்கர், கூடலூர், பாராஞ்சி, பெருமாள்ராஜபேட்டை, அரக்கோணம், எஸ். எம். எஸ். விமல் பிரைமரி ஸ்கூல், நெமிலி, வேட்டாங்குளம், நெடும்புலி, பனப்பாக்கம், ஓச்சேரி, காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கி வருவதை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி குருமூர்த்தி, திமுக மாவட்ட துணை செயலாளர்கள். சிவானந்தம், குமுதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள், பனப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன், நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி சரவணன், பேரூர் செயலாளர்கள் ஜனார்தனன், சீனிவாசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment