நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு எம். எல். ஏ. சு. ரவி வாழ்த்து! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 31 July 2023

நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு எம். எல். ஏ. சு. ரவி வாழ்த்து!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மூலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் இவரது மகன் ராகேஷ் (18) நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றார். இவருக்கு 7.5 % இட ஒதுக்கீடு அடிப்படையில் திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மாணவனின் வீட்டிற்கு அரக்கோணம் எம். எல். ஏ. சு. ரவி நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து நன்றாக படித்து சமூகத்திற்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். 

அப்போது நெமிலி நகர செயலாளர். செல்வம், டவுன் பஞ். கவுன்சிலர். பாரதி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர். முருகன், வட்ட செயலாளர். வெங்கடேசன், நகர மாணவர் அணி தலைவர். வினோத் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad