நெமிலி அருகே 12- ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 September 2023

நெமிலி அருகே 12- ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் 70 பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர். திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் பின்னாவரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் 52 பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர். சாந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவியருக்கு வழங்கினார். இதில் நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர். ச.தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள். பவானி வடிவேலு, மணிவண்ணன், பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் மாணவ,மாணவியர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad