இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த மகேந்திரவாடி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் மகேந்திரவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய ஆறு வகுப்பறைகள் கட்டப்படும் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் பி.பரணிகுமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான. சுந்தரம்மாள் பெருமாள் ஆகியோர் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.
இதில் நெமிலி எஸ்.ஜி.சி.பெருமாள், மகேந்திரவாடி ஊராட்சி மன்ற துணை தலைவர் அமுதா ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் எம். முருகேசன், பொதுப்பணித்துறை எஸ்.டி.ரவி, வேல்முருகன், பா.செ.நரசிம்மன், அ.சீனிவாசன், சரளா முரளி, பி.செல்வம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment