நெமிலி அருகே பெரப்பேரி கிராம ஊராட்சியில் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 19 September 2023

நெமிலி அருகே பெரப்பேரி கிராம ஊராட்சியில் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி!


இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா பெரப்பேரி கிராமம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றது.நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரப்பேரி கிராம ஊராட்சியில், பி.எஸ் ரோடு முதல் பெரப்பேரி கிராமம் வரை உள்ள இணைப்புச் சாலையை இதுவரை கிராம சாலைகளில் பயன்படுத்தப்படாத புதிய வகை தொழில்நுட்பத்துடன், (வைப்ரேட்டர் மிஷனை பயன்படுத்தி) தரமான முறையில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கிராமப்புற மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகளை அமைத்துத்தர வேண்டுமென்ற உயர்ந்த நோக்கம், முழுமையாக பூர்த்தி அடைகின்ற வகையில், கிராம மக்களுக்கு நல்ல தரமான சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட வேண்டுமென ஒன்றிய பெருந்தலைவர் அவர்கள் ஒப்பந்ததாரரிடம் கேட்டுக்கொண்டார்.

 

இந்நிகழ்வின் போது நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர். ச.தீனதயாளன், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad