ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 September 2023

ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

நெமிலி ஊராட்சி ஒன்றியம் சயனபுரம் (ம) பின்னாவரம் ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவியருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா, சயனபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் 70 பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, பள்ளியின் தலைமை ஆசிரியர், திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.


பின்னாவரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் 52 பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, பள்ளியின் தலைமை ஆசிரியர், திரு.சாந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது!.


இந்நிகழ்ச்சிகளில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவியருக்கு வழங்கினார், இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர், ச.தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள், திருமதி.பவானி வடிவேலு, மணிவண்ணன், பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் மாணவச் செல்வங்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad